சுடச்சுட

    

    எட்டயபுரம் அருகே காணாமல்போன முதியவர் சடலமாக மீட்பு

    By எட்டயபுரம்  |   Published on : 17th June 2015 12:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    எட்டயபுரம் அருகே மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் காணாமல் போன முதியவர் செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டார்.

    எட்டயபுரம் வட்டம் கீழக்கரந்தை நடுத்தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி (86). முதியவரான இவர்,  அண்மைக்காலமாக உடல்நிலை மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் அப்பகுதியில் இருந்து வந்தாராம்.

    இந்நிலையில் ஒரு வாரத்துக்கு முன்பு முதியவரை திடீரென காணவில்லையாம். இதையடுத்து அவரது மனைவி கோமதி (76) மாசார்பட்டி காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸார் அவரைத் தேடி வந்தனர். இதற்கிடையே, ராமசாமி கீழக்கரந்தை அருகேயுள்ள காட்டுப்பகுதியில் இறந்த நிலையில், கிடப்பதாக செவ்வாய்க்கிழமை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீஸார் சடலத்தை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுமதித்தனர். மேலும் இதுகுறித்து மாசார்பட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai