Enable Javscript for better performance
கால்பந்து: நைட் ரைடர்ஸ் அணிக்கு வெள்ளிக் கோப்பை- Dinamani

சுடச்சுட

    

    கால்பந்து: நைட் ரைடர்ஸ் அணிக்கு வெள்ளிக் கோப்பை

    By ஆறுமுகனேரி  |   Published on : 17th June 2015 12:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காயல்பட்டினத்தில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் வென்ற நைட் ரைடர்ஸ் அணிக்கு வெள்ளிக் கோப்பை வழங்கப்பட்டது.

    காயல்பட்டினம் வீ-யுனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப், கே.எஸ்.சி. யு.எஸ்.சி. உள்ளிட்ட நகரின் அனைத்து விளையாட்டு சங்கம் சார்பில் கடந்த 4ஆம் தேதி முதல் ஐக்கிய விளையாட்டுச் சங்கத்தில் நடைபெற்று வந்த, விஎம்எஸ் ஜூவல்லர்ஸ் வெள்ளிக் கோப்பைக்கான காயல் பிரிமியர் லீக் கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    இதில், நைட் ரைடர்ஸ் அணி, ஸ்ட்ரேஞ்ச் ஸ்பைக்கர்ஸ் அணியை 1-0 என்ற கோல்கணக்கில் வென்று, வெள்ளிக் கோப்பையை தட்டிச் சென்றது.

    இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பாக ஹாஜி விஎம்எஸ் லெப்பை நினைவாக நடத்தப்பட்ட 6ஆம் ஆண்டு கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் வி சபையர் அணி வி ரெட் அணியை சமநிலை முறிவுமுறையில் 7-6 என்ற கோல்கணக்கில் வென்றது.

    பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு, அரிமா சங்க மாவட்ட துணை ஆளுநர் சுதந்திரலட்சுமி  தலைமை வகித்தார். காயல் ஸ்போர்டிங் கிளப்பின் செயலர் பேராசிரியர் சதக்தம்பி, வி-யுனைடெட் குழுமத்தின் மூத்த உறுப்பினர்கள் அமீன், வாவு ஆப்தீன், பசீர் மற்றும்  சேக்கனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பி.ஹிஸாம் இறைமறை வசனத்தை ஓதி நிகழ்ச்சியை தொடங்கினார். முதல் இடம் பிடித்த நைட் ரைடர்ஸ் அணி வீரர்களுக்கு சென்னை எல்.கே.எஸ் கோல்டு ஹவுஸ் வழங்கிய பரிசுத்தொகை ரூ. 17 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பை வழங்கப்பட்டது.

    இரண்டாமிடம் பிடித்த ஸ்ட்ரேஞ்ச் ஸ்பைக்கர்ர்ஸ் அணிக்கு காயல்பட்டினம் விளக்கு 2000 வழங்கிய பரிசுத் தொகை ரூ. 12 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பை வழங்கப்பட்டது. அரையிறுதிக்குத் தகுதி பெற்ற கேளரி பேர்ட்ஸ் மற்றும் பால் பிளாஸ்டர்ஸ் அணிகளுக்கு தலா ரூ. 4 ஆயிரம் வழங்கப்பட்டது.

    ஹாஜி விஎம்எஸ் லெப்பை நினைவு கால்பந்து போட்டியில் வி சபையர்ஸ் அணிக்கு ரூ. 2 ஆயிரமும், இரண்டாமிடம் பெற்ற வி.ரெட் அணிக்கு ரூபாய் ஆயிரமும், அரையிறுதி வரை முன்னேறிய அணிகளான விஒயிட் மற்றும் வி.சில்வர் அணிகளுக்கு தலா ரூ. 500ம் பரிசாக வழங்கப்பட்டது. பாலப்பா அப்துல் காதர் வரவேற்றார். ஜஹாங்கிர் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai