சுடச்சுட

  

  சீனாவில் சர்வதேச கருத்தரங்கு: கோவில்பட்டி பேராசிரியர் பங்கேற்பு

  By கோவில்பட்டி  |   Published on : 17th June 2015 12:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சீனா செங்டு தகவல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில், கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி பேராசிரியர் காளிதாச முருகவேல் பங்கேற்றார்.

  இப்பல்கலைக்கழகமும், சான்டோவ் பல்கலைக்கழகமும் இணைந்து கருத்தாக்கம், வடிவமைப்பு, இயக்கம் மற்றும் செயல்படுத்துதல் என்ற தலைப்பில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய புதிய கல்வித் திட்டத்தின் 11ஆவது சர்வதேச கருத்தரங்கத்தை கடந்த 8ஆம் தேதிமுதல் 4 நாள்கள் நடத்தின.

  இக்கருத்தரங்கில், நேஷனல் பொறியியல் கல்லூரியின் இயந்திரவியல் துறைத்  தலைவரும், பேராசிரியருமான காளிதாச முருகவேல் கலந்துகொண்டு, இப்புதிய பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வித் திட்டம் பற்றிய தனது ஆராய்ச்சிக் கட்டுரையை சமர்ப்பித்து விவாதங்களிலும் பங்கு கொண்டார்.

  இதுகுறித்து அவர் கூறியதாவது: தற்போது உலக அளவில் தொழில்நுட்பக் கல்வியானது பயன் அடிப்படையிலான கல்வித் திட்டத்தின் அடிப்படையில் கற்பிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் உள்ள பல்வேறு நடைமுறை சிக்கல்களை அகற்றும்விதமாக கருத்தாக்கம், வடிவமைப்பு, இயக்கம் மற்றும் செயல்படுத்துதல் என்ற பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய புதிய கல்வித் திட்டம் அமையும்.

  இக்கல்வித் திட்டம் மாணவர்களுக்கு தரமான பொறியியல் கல்வி கிடைக்கவும், தங்களது தனித் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும், இதன் வாயிலாக சர்வதேச அளவில் மாணவர்கள் அதிக வேலைவாய்ப்பு பெற்றிடவும் உதவும். தற்போது சர்வதேச அளவில் அமெரிக்கா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ள 140 தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களில் இப்புதிய கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் நேஷனல் பொறியியல் கல்லூரியிலும் இப்புதிய கல்வித் திட்டம் அறிமுகம் செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

  சீனா சென்று சர்வதேச கருத்தரங்கில் கலந்துகொண்டு திரும்பிய பேராசிரியர் காளிதாசமுருகவேலை கே.ஆர். கல்வி நிறுவனங்களின் தலைவர் கே.ராமசாமி, நிர்வாக  இயக்குநர் கே.ஆர்.அருணாசலம், பொறியியல் கல்லூரி இயக்குநர் சொக்கலிங்கம், முதல்வர் சண்முகவேல் மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் பாராட்டினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai