சுடச்சுட

  

  "சென்னையில் நாளை நடைபெறும் விளையாட்டு வீராங்கனை தேர்வில் பங்கேற்கலாம்'

  By தூத்துக்குடி  |   Published on : 17th June 2015 12:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சென்னையில் வியாழக்கிழமை (ஜூன் 18) நடைபெறும் விளையாட்டு வீராங்கனை தேர்வில் பங்கேற்க விரும்புவோர் கலந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் க. சேவியர் ஜோதி சற்குணம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் அமைக்கப்பட்டு உள்ள சிறப்பு விளையாட்டு விடுதியில் இளம் விளையாட்டு வீரர்கள் ஊக்கப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

  மேலும், மாணவ, மாணவியர் கல்வியுடன் நவீன விளையாட்டுப் பயிற்சியும் பெற்று வருகிறார்கள். இந்நிலையில், 2015-2016ஆம் ஆண்டுக்கு காலியாக உள்ள தடகளம், கால்பந்து மற்றும் வாலிபால் விளையாட்டுக்களுக்கு புதிய மாணவியருக்கான இரண்டாம் கட்டத் தேர்வு சென்னை நேரு விளையாட்டு அரங்கில் வியாழக்கிழமை (ஜூன் 18)  காலை 8 மணிக்கு நடைபெறுகிறது.

  பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், கல்லூரியில் படித்துக் கொண்டிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். தலை சிறந்த விளையாட்டு வீராங்கனைகளாக இருந்தால் பிளஸ் 2 படித்துக் கொண்டிருப்பவர்களும் கலந்துகொள்ளலாம். 1.1.2015 அன்று 22 வயதுக்குள்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.

  தடகளம், கால்பந்து மற்றும் வாலிபால் போன்ற விளையாட்டுகளுக்காக காலியாக உள்ள இடங்களுக்கு சிறந்த வீராங்கனைகளுக்கு மட்டும் தேர்வு நடைபெற உள்ளது.  விண்ணப்பப் படிவத்தினை இணையதளத்தின் மூலம் நகல் எடுத்து பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் வியாழக்கிழமை காலை 8 மணிக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நேரில் ஆஜராக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai