சுடச்சுட

  

  சாத்தான்குளம் அருகே தம்பதியைத் தாக்கி, மளிகைக் கடையை சேதப்படுத்தியதாக, சகோதரர்கள் உள்ளிட்ட 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

  மணிநகரைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கபாண்டி (62), அதே ஊரில் பெரியதாழை செல்லும் சாலையில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். மேலும், பிச்சிகுடியிருப்பைச் சேர்ந்த சக்திவேல் என்பவரது தோட்டத்தையும் குத்தகைக்கு எடுத்து பார்த்து வந்தார். இந்நிலையில், சக்திவேலின் மகன் மணிகண்டன், அந்தக் குத்தகை முடிந்ததும் மீண்டும் முத்துராமலிங்கபாண்டிக்கு கொடுக்காமல் பள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சரத்குமார் என்பவருக்கு குத்தகைக்கு கொடுத்துவிட்டாராம்.

  இதனால் மணிகண்டனுக்கும், முத்துராமலிங்கபாண்டிக்கும் பிரச்னை ஏற்பட்டு  முன்விரோதம் உள்ளதாம். இந்நிலையில், திங்கள்கிழமை இரவு முத்துராலிங்கபாண்டியின் கடைக்கு வந்த மணிகண்டன், அவரை அவதூறாகப் பேசினாராம். இதனால் ஏற்பட்ட தகராறில், மணிகண்டன், அவரது சகோதரர்கள் ரவி, கண்ணன், சரத்குமார் ஆகிய 4 பேரும் சேர்ந்து கடையை சேதப்படுத்தி, முத்துராமலிங்கபாண்டியையும், அவரது மனைவி  இந்திராவதியையும் தாக்கிவிட்டுச் சென்று விட்டனராம். இதில், காயமடைந்த இருவரும் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

  இதுகுறித்து தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ராபின்சன் வழக்கு பதிவு செய்து மணிகண்டன் உள்ளிட்ட 4 பேரையும் தேடி வருகிறார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai