சுடச்சுட

    

    தலைக்கவசம் அணிய வலியுறுத்தி விழிப்புணர்வுப் பேரணி

    By கோவில்பட்டி  |   Published on : 17th June 2015 12:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டியில் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி, விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    மாவட்ட காவல் துறை, கோவில்பட்டி ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை இணைந்து நடத்திய இப்பேரணிக்கு கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் (பொறுப்பு) செளந்தரநாயகி தலைமை வகித்தார். பள்ளிக் கல்வி ஆய்வாளர் செல்லக்குருசாமி, ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை நிறுவனர் தேன்ராஜா, காவல் ஆய்வாளர்கள் பவுல்ராஜ், விஜயகுமார், மருதவள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏ.எஸ்.பி. முரளிரம்பா பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தார். அம்பேத்கர் சிலை முன்பிருந்து புறப்பட்ட இப்பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக பயணியர் விடுதியில் நிறைவடைந்தது.

    இருசக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்; சாலைப் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க வேண்டும்; வாகனம் ஓட்டும்போது செல்லிடப்பேசி பயன்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, பேரணியில் பங்கேற்ற மாணவர், மாணவிகள் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர்.  இதில், போக்குவரத்து உதவி-ஆய்வாளர் செல்வகுமார், நாடார் நடுநிலைப் பள்ளியின் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் சண்முகக்கனி, ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை பொறுப்பாளர் சேர்மராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai