சுடச்சுட

  

  தூத்துக்குடியில் அக்மார்க் தரம் பிரிப்பு ஆய்வகம் திறப்பு

  By தூத்துக்குடி  |   Published on : 17th June 2015 12:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தூத்துக்குடியில் ரூ. 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட மாநில அக்மார்க் தரம் பிரிப்பு ஆய்வகத்தை முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார். இந்த ஆய்வகத்தை மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் பார்வையிட்டார்.

  தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண்மைத் துறை மூலம் கோவில்பட்டி, எட்டயபுரம், புதூர், கழுகுமலை ஆகிய 4 இடங்களில் ஒமுங்குமுறை விற்பனைக் கூடங்களில் குளிர்பதனக் கிடங்குகள் புதிதாகக் கட்டப்பட்டுள்ளன. தலா ரூ. 31.80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 25 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட புதிய குளிர்பதனக் கிடங்குகளை முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார். இதேபோல, தூத்துக்குடி- எட்டயபுரம் சாலையில் ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட மாநில அக்மார்க் தரம்பிரிப்பு ஆய்வகத்தையும் முதல்வர் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

   இந்தப் புதிய கட்டடங்களை மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

  இது குறித்து ஆட்சியர் கூறியது: புதிய குளிர்பதனக் கிடங்குகளில் மிளகாய் வற்றல், பயறு வகைகள், கொத்தமல்லி, காய்கறிகள் மற்றும் பழங்களைக் குறைந்த வாடகைக்கு இருப்பு வைத்து நிறமும், தரமும் மாறாமல் வெளிச் சந்தையில் நல்ல விலை வரும்போது விற்று கூடுதல் லாபம் பெற்று பயன்பெறலாம் என்றார்.

  நிகழ்ச்சியில்,வேளாண்மை இணை இயக்குநர் ஜெயகுமார், துணை இயக்குநர் (வேளாண் விற்பனை) மாரிமுத்து, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) செந்தில்வேல்முருகன், மக்கள் தொடர்பு அலுவலர் கு. தமிழ்செல்வராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai