சுடச்சுட

    

    தூத்துக்குடியில் மனைவியை எரித்துக் கொன்ற காவலாளிக்கு ஆயுள் தண்டனை

    By தூத்துக்குடி  |   Published on : 17th June 2015 12:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மனைவியை எரித்துக் கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில் காவலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை தூத்துக்குடி மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.

    தூத்துக்குடி வள்ளிநாயகிபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல் (55). தனியார் நிறுவனத்தில் காவலாளியாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சிவஞானம்மாள். சண்முகவேலுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் அவர் அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்தாராம்.  இந்நிலையில், வீட்டில் இருந்தபோது கடந்த 21.06.2013 அன்று தம்பதியிடையே ஏற்பட்ட தகராறில் சிவஞானம்மாள் மீது சண்முகவேல் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. இதில், காயமைடந்த சிவஞானம்மாள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சில நாள்களில் உயிரிழந்தார்.

     இந்த சம்பவம் குறித்து தென்பாகம் போலீஸார் வழக்குப் பதிந்து சண்முகவேலை கைது செய்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. செவ்வாய்க்கிழமை இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புளோரா குற்றம்சாட்டப்பட்ட சண்முகவேலுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 5,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து, சண்முகவேல் பாளை யங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai