சுடச்சுட

  

  "தூத்துக்குடியில் விரைவில் இலவச வை-பை வசதி அறிமுகம்'

  By தூத்துக்குடி  |   Published on : 17th June 2015 12:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தூத்துக்குடி மாவட்டத்தில், விமான நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் விரைவில் இலவச வை-பை வசதி அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார் பிஎஸ்என்எல் பொதுமேலாளர் ஷாஷு ஜார்ஜ்.

  தூத்துக்குடி தொலைத்தொடர்பு மாவட்ட புதிய பொதுமேலாளராக செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட ஷாஜி ஜார்ஜ் அளித்த பேட்டி:

  நாடு முழுவதும் இலவச ரோமிங் திட்டத்தை கடந்த 15ஆம் தேதி முதல் பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்முலம் போஸ்ட்பெய்டு மற்றும் பிரீபெய்டு வாடிக்கையாளர்கள் ரோமிங்கின் போது, இன்கமிங் கால்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

  தூத்துக்குடி மாவட்டத்தில், வை-பை மற்றும் ஹாட்ஸ்பாட் வசதிகளை தூத்துக்குடி விமானநிலையம்,  ரயில் நிலையம், பேருந்து நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் தனியார் பல்பொருள் அங்காடிகளில் பிஎஸ்என்எல் நிறுவனம் நிறுவ உள்ளது.

  இதன்மூலம் பயணிகள் முதல் 30 நிமிடங்கள் இலவசமாக உபயோகித்துக் கொள்ளலாம். அதன்பின் ஒவ்வொரு மணி நேர உபயோகத்துகும் ரூ. 30 செலுத்த வேண்டும். பிஎஸ்என்எல் செல்லிடப்பேசி அலைவரிசை பிரச்னைகள் சரிசெய்யப்பட்டு மொபைல் சேவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

  இதன் காரணமாக தனியார் நிறுவன செல்லிடப்பேசி எண்களை பயன்படுத்தியோர் பிஎஸ்என்எல் நிறுவன சேவைக்கு மாறும் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.

  பிராட்பேண்ட் சேவைக்கு 12628 என்ற ஹெல்ப் டெஸ்க் எண்  அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.  இதன்மூலம் வாடிக்கையாளர்கள் தொலைபேசி மூலமாகவே தங்கள் பிரச்னைகளை சரி செய்து விடலாம்.

  தூத்துக்குடி மாவட்டத்தில் 2.21 லட்சம் செல்லிடப்பேசி இணைப்புகள் உள்ளன.  17,600 தரைவழி இணையதள இணைப்புகள் உள்ளன. மேலும், தரைவழி தொலைபேசி இணைப்புகள் 50,000 உள்ளன. இதை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறோம் என்றார் அவர்.

  பேட்டியின்போது, துணை பொது மேலாளர்கள் பிலோமினா சாந்தி, லட்சுமணபெருமாள், ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai