சுடச்சுட

    

    நாசரேத் அருகே திமுக பிரமுகரை அரிவாளால் வெட்டியவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

    மூக்குப்பீறி கோயில் தெருவைச் சேர்ந்தவர் கோயில்ராஜ் (45). திமுக கிளைச் செயலரான இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.  2 ஆண்டுகளுக்கு முன் மூக்குப்பீறியைச் சேர்ந்த ராலீஸ் ஆபிரகாம் என்பவருக்கு கருவேலம்பாட்டைச் சேர்ந்த முருகபாஸ்கர் என்பவரிடமிருந்து ரூ. 12 லட்சம் வாங்கி கொடுத்தாராம்.

    ஆனால் ராலீஸ் ஆபிரகாம் பணத்தை திருப்பி கொடுக்கவில்லையாம்.  இதனால் முருகபாஸ்கர், கோயில்ராஜிடம் பணத்தை வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். இதுதொடர்பாக திங்கள்கிழமை கோயில்ராஜுக்கும், முருகபாஸ்கருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த முருகபாஸ்கர், கோயில்ராஜை அரிவாளால் வெட்டினாராம். இதில், பலத்த காயமடைந்த கோயில்ராஜ் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து நாசரேத் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) விஜயகுமார், உதவி ஆய்வாளர் ராஜகுமாரி ஆகியோர் வழக்குப் பதிந்து முருகபாஸ்கரை தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai