Enable Javscript for better performance
பள்ளி வாகனம் ஏறியதில் சிறுமி சாவு - Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே செவ்வாய்க்கிழமை பள்ளி வாகனம் சிறுமி மீது ஏறியதில் அவர் இறந்தார்.

    கயத்தாறையடுத்த அய்யனாரூத்து நடுத் தெருவைச் சேர்ந்த மந்திரமூர்த்தி மகள் சுப்புலட்சுமி (3). தேவர்குளத்தில் உள்ள மெட்ரிக் பள்ளியில் கே.ஜி. வகுப்பு பயின்றுவந்தார். வழக்கம்போல் பள்ளி வாகனத்திலேயே சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்புவாராம். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அய்யனாரூத்து பேருந்து நிறுத்தம் அருகே பள்ளி வாகனத்திலிருந்து சிறுமி இறங்கியபோது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தாராம். அப்போது புறப்பட்ட பள்ளி வாகனம் சிறுமி மீது ஏறி, இறங்கியதாம். இதில் சிறுமி வாகனத்தின் பின்புற டயரில் சிக்கி பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு கயத்தாறு தனியார் மருத்துவமனைக்கு  கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர், சிறுமி இறந்துவிட்டதாகத் தெரிவித்தார்.

    இது குறித்து கயத்தாறு போலீஸார் வழக்குப் பதிந்து, பள்ளி வாகன ஓட்டுநரான அய்யனாரூத்து தெற்குத் தெருவைச் சேர்ந்த ப.இருதயத்திடம் (72) விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai