சுடச்சுட

  

  மந்தித்தோப்பில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்

  By கோவில்பட்டி  |   Published on : 17th June 2015 12:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட செயல்பாடுகள் குறித்த சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம் மந்தித்தோப்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

  கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட செயல்பாடுகளை சமூக தணிக்கை செய்வதற்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சமூக தணிக்கை இயக்குநர் நாலாட்டின்புத்தூர், முடுக்குமீண்டான்பட்டி, இடைசெவல், ஊத்துப்பட்டி, மந்தித்தோப்பு, பாண்டவர்மங்கலம் ஆகிய ஊராட்சிகளை தேர்வு செய்து, மேற்படி ஊராட்சிகளில் இம்மாதம் 8ஆம் தேதிமுதல் செவ்வாய்க்கிழமைவரை சமூக தணிக்கை நடைபெற்றது.

  இதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை அந்தந்த ஊராட்சியில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.  மந்தித்தோப்பு ஊராட்சி நூலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், ஊராட்சித் தலைவர் மாரியப்பன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகுமார், வட்டார வள அலுவலர்கள் ஜெயராஜ், முத்துமுருகன் ஆகியோர் கலந்துரையாடினர்.

  இதில், ஊராட்சி துணைத் தலைவர் முருகன், கிராம சமூக தணிக்கையாளர்கள் சுடலையம்மாள், மணிமேகலை, சங்கரேஸ்வரி, முத்துலட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  ஊராட்சி செயலர் (பொ) பாலகுமார் வரவேற்றார். பணித்தள பொறுப்பாளர் தீபா நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai