சுடச்சுட

    

    குலசேகரன்பட்டினம் அருகே சாலையோர பனைமரத்தில் கார் மோதியதில், அதில் பயணம் செய்த 3 பேர் பலத்த காயமடைந்தனர்.

    காயல்பட்டினத்தைச் சேர்ந்த சபீர், தனது நண்பர்கள் இருவருடன் திருச்செந்தூரில் இருந்து குலசேகரன்பட்டினம் செல்வதற்காக காரில் வந்துள்ளார். கார் குலசேகரன்பட்டினம் அருகேயுள்ள கல்லாமொழி அருகே வந்தபோது நிலைதடுமாறி சாலையோர பனைமரத்தில் மோதியது. இதில், காரில் வந்த 3 பேரும் பலத்த காயமடைத்தனர்.

    தகவலறிந்து வந்த குலசேகரன்பட்டினம் போலீஸார் காயமடைந்தவர்களை மீட்டு திருச்செந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இதுகுறித்து  வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai