Enable Javscript for better performance
மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

    By தூத்துக்குடி  |   Published on : 17th June 2015 12:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, திமுக சார்பில் செவ்வாய்க்கிழமை  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் முறையான குடிநீர் வழங்க வேண்டும்; சுகாதார சீர்கேட்டை சரி செய்ய வேண்டும்; சாலைகளை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக சார்பில் சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாநகரச் செயலர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தார். மாநில மகளிரணி துணைச் செயலர் கீதாஜீவன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து திமுக தெற்கு மாவட்டச் செயலர் என். பெரியசாமி பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில், மாநில பொதுக்குழு உறுப்பினர் என்.பி. ஜெகன், முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம், மாமன்ற உறுப்பினர்கள் கோட்டுராஜா,  சுரேஷ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆ. திருச்சிற்றம்பலம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, மாநகராட்சி நிர்வாகத்துக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai