சுடச்சுட

    

    விளாத்திகுளத்தில் ஆடு வியாபாரி வீட்டில் திருடிய இளைஞர் கைது

    By விளாத்திகுளம்  |   Published on : 17th June 2015 12:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விளாத்திகுளம் அருகே ஆடு வியாபாரி வீட்டில் பீரோவை உடைத்து பணத்தைத் திருடியதாக அருப்புக்கோட்டையைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

    விளாத்திகுளம் அருகேயுள்ள ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ் (50). ஆடு வியாபாரியான இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது குடும்பத்தினருடன் ராமேசுவரம் சென்றுவிட்டு திங்கள்கிழமை வீடு திரும்பினாராம். அப்போது வீட்டின் பின்புற ஜன்னல் கம்பிகள் மற்றும் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிப்பது தெரியவந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூ.88 ஆயிரம் பணம் திருடு போயிருந்ததாம்.

    இது குறித்துவிளாத்திகுளம் காவல் நிலையத்தில் தங்கராஜ் புகார் அளித்தார். உதவி ஆய்வாளர் முருகையன் தலைமையிலான போலீஸார் தடயங்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.

    இதில் ஆடு வியாபாரி தங்கராஜ் வீட்டிற்கு அருகில் உள்ள வீரபாண்டியன் என்பவரது தோட்டத்தில் வேலை செய்து வந்த அருப்புக்கோட்டையைச் சேர்ந்த அந்தோனிராஜ் மகன் மாரிச்செல்வம் (24) என்பவர் இத் திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் மாரிச் செல்வத்தை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ. 88 ஆயிரத்தை மீட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai