சுடச்சுட

  

  தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே செவ்வாய்க்கிழமை பள்ளி வாகனம் சிறுமி மீது ஏறியதில் அவர் இறந்தார். இது தொடர்பாக, பள்ளி நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இறந்த சிறுமியின் உறவினர்கள் கயத்தாறு காவல் நிலையத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனர்.

  கயத்தாறையடுத்த அய்யனார்ஊத்து நடுத் தெருவைச் சேர்ந்த மந்திரமூர்த்தி மகள் சுபலட்சுமி 3). தேவர்குளத்தில் உள்ள மெட்ரிக் பள்ளியில் கே.ஜி. வகுப்பு பயின்று வந்தார். வழக்கம்போல் பள்ளி வாகனத்திலேயே சென்றுவிட்டு செவ்வாய்க்கிழமை மாலை வீடு திரும்பினார். அப்போது அய்யனார்ஊத்து பேருந்து நிறுத்தம் அருகே பள்ளி வாகனத்திலிருந்து சிறுமி இறங்கிய போது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது புறப்பட்ட பள்ளி வாகனம் சிறுமி மீது ஏறி, இறங்கியதில் வாகனத்தின் பின்புற டயரில் சிக்கி சிறுமி பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு கயத்தாறு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர் சிறுமி இறந்துவிட்டதாகக் கூறினார்.

  இதுகுறித்து கயத்தாறு போலீஸார் வழக்குப் பதிந்து பள்ளி வாகன ஓட்டுநரான ப.இருதயத்தை(72) புதன்கிழமை கைது செய்தனர்.

  இந்நிலையில், பள்ளி வாகனத்துக்கு உதவியாளர்கள் யாரையும் நியமிக்காத காரணத்தினால் தான் இச்சம்பவம் நடந்துள்ளது என்றும், இதுதொடர்பாக பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி அய்யனார்ஊத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இறந்த சிறுமியின் உறவினர்கள் கயத்தாறு காவல் நிலையத்தை புதன்கிழை முற்றுகையிட்டனர்.

  பின்னர் ஆய்வாளர் போராட்டக் குழுவினருடன் பள்ளி நிர்வாகி மீது வழக்குப் பதிந்து, நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறிதையடுத்து போராட்டக் குழுவினர் கலைந்து சென்றனர்.

  இதையடுத்து பள்ளி நிர்வாகி மங்கையர்க்கரசி மீது புதன்கிழமை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai