சுடச்சுட

  

  கருவேல மரங்களை அகற்ற வனத் துறை அனுமதி கிடைக்குமா?

  By ஸ்ரீவைகுண்டம்  |   Published on : 18th June 2015 12:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஸ்ரீவைகுண்டம் அணையின் கீழ்புறம் ஆழ்வார்திருநகரி பாலம் வரை உள்ள பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வன நிலங்களாக இருப்பதால், வனத்துறையின் அனுமதி பெற்ற பின்னரே கருவேல மரங்களை அகற்ற முடியும் என பொதுப்பணித் துறையினர் தெரிவித்துள்ளனர்.

  ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து கீழ் பகுதியில் ஏரல் வரையுள்ள தாமிரவருணி ஆற்றின் கரையோரங்களிலும், ஆற்றின் நடுவிலும் பொதுப்பணித் துறையினர் மணல் அள்ள அனுமதி அளித்ததால், கருவேல மரங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன. இதனால் நீர் ஆதாரம் பாதிக்கப்படுவதுடன், நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருகிறது. மேலும், வெள்ளக் காலங்களில் ஆற்று நீரின் போக்கு திசைமாறி, கரைகள் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாமிரவருணி விவசாயிகள் பாதுகாப்பு போராட்டக் குழுத் தலைவர் கந்தசாமி, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தார்.

  இக்கோரிக்கை மனுவுக்கு பதிலளித்துள்ள பொதுப்பணித் துறை தாமிரவருணி வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் சுப்பிரமணியன், ஸ்ரீவைகுண்டம் அணையின் கீழ்புறம் ஆழ்வார்திருநகரி பாலம் வரை உள்ள பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வன நிலங்களாக இருப்பதால், வனத்துறையின் அனுமதி பெற்ற பின்னரே கருவேல மரங்களை அகற்ற முடியும் என தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து தாமிரவருணி விவசாயிகள் பாதுகாப்பு போராட்டக் குழுத் தலைவர் கந்தசாமி கூறியதாவது: இப்போது கருவேல மரங்கள் வளர்ந்துள்ள இடம், ஒரு காலத்தில் ஆற்று மணல் அதிக அளவில் இருந்த இடமாகும். பொதுப்பணித் துறையினர் மணல் அள்ள எவ்வித விதிமுறையையும் பின்பற்றாத நிலையில், கருவேல மரங்களை அகற்றுவதற்கு மட்டும் வனத்துறையின் அனுமதி பெற வேண்டும் என தெரிவிப்பது கண்டனத்திற்கு உரியதாகும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai