Enable Javscript for better performance
கோவில்பட்டியில் தடுப்புச் சுவரில் மோதிய அரசுப் பேருந்து- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டியில் தடுப்புச் சுவரில் மோதிய அரசுப் பேருந்து

    By கோவில்பட்டி  |   Published on : 18th June 2015 12:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டி புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து திடீரென நிலைகுலைந்து பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதியதில், ஓட்டுநர் காயமடைந்தார்.

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சாத்தூர் பணிமனையைச் சேர்ந்த அரசுப் பேருந்து புதன்கிழமை இரவு கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்திலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

    விருதுநகர் மாவட்டம், ஆர்.ஆர். நகர் அம்மாப்பட்டியைச் சேர்ந்த எஸ்.பாலமுருகன் (40) ஓட்டிச் சென்ற அரசுப் பேருந்து, கோவில்பட்டி புறவழிச்சாலை நாற்கர சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென நிலைகுலைந்து தடுப்புச் சுவரில் மோதி அணுகு சாலையில் ஒரு பக்கமாக சரிந்தது. இதில், பேருந்தின் முன்பகுதி உள்பட பெரும்பாலான பகுதிகள் சேதமடைந்தன. பேருந்து ஓட்டுநர் பாலமுருகன் காயமடைந்தார்.

    பேருந்திலிருந்த 10 பயணிகளுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து பேருந்து நடத்துநர் ரா.கண்ணன்(47) அளித்த புகாரின் பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai