சுடச்சுட

    

    முக்காணியில் நிகழ்ந்த கோஷ்டி மோதலில் காயமடைந்த முதியவர் மருத்துவமனையில் இறந்தார்.

    இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறப்படுவதாவது: முக்காணி புதுமனை நாடார் தெருவைச் சேர்ந்த இரண்டு கோஷ்டியினருக்கிடையே கோயில் நிலம் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் இம்மாதம் 10ஆம் தேதி நிகழ்ந்த மோதலில் இருதரப்பையும் சேர்ந்த பலர் காயமடைந்தனர். இதில், முக்காணி புதுமனை நாடார் தெருவைச் சேர்ந்த சமுத்திரபாண்டி (80) பலத்த காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் செவ்வாய்க்கிழமை இரவு இறந்தார். இதுகுறித்து ஆத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai