Enable Javscript for better performance
சமூக பாதுகாப்புத் திட்டத்தில் ஓய்வூதியம் பெறுவோர் ஆதார் எண்ணை பதிவு செய்ய அழைப்பு- Dinamani

சுடச்சுட

    

    சமூக பாதுகாப்புத் திட்டத்தில் ஓய்வூதியம் பெறுவோர் ஆதார் எண்ணை பதிவு செய்ய அழைப்பு

    By தூத்துக்குடி  |   Published on : 18th June 2015 12:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சமூக பாதுகாப்புத் திட்டத்தில் ஓய்வூதியம் பெறுவோர் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளின் ஆதார் எண்களை சமூக பாதுகாப்புத் திட்ட இணையதளத்தில் பதிவு செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதனால், தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகை, இந்திராகாந்தி தேசிய விதவை உதவித்தொகை, இந்திராகாந்தி தேசிய ஊனமுற்றோர் உதவித்தொகை மற்றும் விதவை உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, ஊனமுற்றோர் உதவித்தொகை, முதிர் கன்னி உதவித்தொகை, முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் ஆகிய திட்டத்தில் உதவித்தொகை பெறும் பயனாளிகள் அனைவரும் ஜூன் 30 ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை பதிவுசெய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    ஆதார் அடையாள அட்டை இதுவரை பெறாத முதியோர் ஓய்வூதியப் பயனாளிகள் தங்கள் இருப்பிடத்தின் அருகில் உள்ள மாநகராட்சி அல்லது நகராட்சி அல்லது வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் ஆதார் நிரந்தர மையத்துக்கு சென்று ஆதார் அட்டை விவரங்களை உடன் பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும், முதியோர் ஓய்வூதிய பயனாளிகள் அனைவரும் வங்கிக் கணக்கு தொடங்கி இருக்க வேண்டும். வங்கிக் கணக்கு இல்லாத பயனாளிகள் தனிவட்டாட்சியரை அணுகி உடன் வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai