Enable Javscript for better performance
ஜூன் 20இல் தூத்துக்குடியில் மின்தடை- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடி மாநகரப் பகுதியில் சனிக்கிழமை (ஜூன் 20) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தூத்துக்குடி நகர மின் விநியோக செயற்பொறியாளர் இரா. புருஷோத்தமன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி- எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (ஜூன் 20) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை தூத்துக்குடி ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, போல்பேட்டை, 1ஆம் ரயில்வே கேட், 2ஆம் ரயில்வே கேட், மட்டக்கடை, தெப்பகுளம், சிவன்கோயில் தெரு, டபுள்யூ.ஜி.சி. சாலை, ஜார்ஜ் சாலை, சிவந்தாகுளம் பிரதான சாலை, தாமோதரநகர், குறிஞ்சிநகர், அன்னை தெரசா நகர், ராஜீவ் நகர், மில்லர்புரம், அரசு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, சிதம்பரநகர், பிரையண்ட் நகர், சுப்பையா முதலியார்புரம், திருச்செந்தூர் சாலை ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai