Enable Javscript for better performance
திருட்டு வழக்கில் இருவருக்கு 2 ஆண்டு சிறை: சாத்தான்குளம் நீதிமன்றம் தீர்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    திருட்டு வழக்கில் இருவருக்கு 2 ஆண்டு சிறை: சாத்தான்குளம் நீதிமன்றம் தீர்ப்பு

    By சாத்தான்குளம்  |   Published on : 18th June 2015 12:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாத்தான்குளம் அருகே விவசாயி வீட்டில் நகை திருடிய வழக்கில் இருவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சாத்தான்குளம் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.

    சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்தவர் அந்தோணி ராசையா (62). விவசாயியான இவரது வீட்டில் கடந்த 6.4.2013இல்   சுமார் 5 பவுன் நகை, 150 கிராம் வெள்ளி, ரூ.40 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடுபோனது.

    இதுகுறித்து தட்டார்டம் போலீஸார் வழக்குப் பதிந்து  அதே ஊரைச் சேர்ந்த செல்வராஜ் மகன் அருள்பிரகாஷ் (23), மைக்கேல் டர்லின் (21) ஆகிய இருவரை கைது செய்து சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு சாத்தான்குளம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் புதன்கிழமை இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி  ஜெ.செல்வன்ஜேசுராஜா அருள்பிரகாஷ், மைக்கேல் டர்லின் ஆகிய இருவருக்கும் தலா 2 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai