சுடச்சுட

    

    தூத்துக்குடியில் தலைக்கவச விழிப்புணர்வுப் பேரணி

    By தூத்துக்குடி  |   Published on : 18th June 2015 12:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இருசக்கர வாகனம் ஓட்டுவோர் தலைக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடியில் புதன்கிழமை விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

    தமிழகத்தில் இருசக்கர வாகனம் ஓட்டுவோர் ஜூலை 1 ஆம் தேதி முதல் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி காவல்துறை சார்பில் புதன்கிழமை விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

    தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையம் முன் தொடங்கிய இப்பேரணிக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த் தலைமை வகித்தார். மாநகரக் காவல் உதவி கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் முன்னிலை வகித்தார்.

    மாவட்ட எஸ்.பி. அஸ்வின்கோட்னீஸ் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தார். இப்பேரணி ராஜாஜி பூங்கா, விவிடி சிக்னல், மில்லர்புரம், பாளைங்கோட்டை சாலை வழியாகச் சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முடிவடைந்தது.

    இருசக்கர வாகனம் ஓட்டுவோர் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். சாலைப் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். வாகனம் ஓட்டும்போது செல்லிடப்பேசி பயன்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட கருத்துகளை வலியுறுத்தி பேரணியில் சென்ற போலீஸார் மற்றும் மருத்துவக் கல்லூரி, பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai