சுடச்சுட

    

    "தூத்துக்குடியில் 20இல் குடிநீர் விநியோகம் தடைப்படும்'

    By தூத்துக்குடி  |   Published on : 18th June 2015 12:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 20) குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் சோ. மதுமதி வெளியிட்ட செய்திக்குறிப்பு:  வல்லநாடு தலைமை நீரேற்று நிலையம் பகுதிக்கு செல்லும் மின்பாதையான பாளையங்கோட்டை துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (ஜூன் 20) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால் வல்லநாடு நீரேற்று நிலையத்தில் குடிநீரை பம்பிங் செய்ய இயலாத நிலை ஏற்படும் என்பதால் மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும். எனவே பொதுமக்கள் கிடைக்கும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai