Enable Javscript for better performance
வரதட்சிணை வழக்கில் கணவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    திருச்செந்தூர் அருகே வரதட்சிணை கேட்டு மனைவியை அவரது வீட்டுக்கு அனுப்பிய கணவரை செவ்வாய்க்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

    திருச்செந்தூர் அருகே உள்ள தளவாய்புரத்தைச் சேர்ந்த வண்ணமுத்து மகன் சுடலை (40). வேன் ஓட்டுநரான இவருக்கும், வீரபாண்டியன்பட்டணம் மெடோனா வீதியைச் சேர்ந்த பேச்சியம்மாளுக்கும் (39) கடந்த 2001ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அப்போது பெண் வீட்டார் வரதட்சிணையாக 20 பவுன் நகை, ரூ. 1 லட்சம் ரொக்கத்தை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. தம்பதிக்கு மதுப்பிரியா (13), அபிஷேக் (11) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.  இந்நிலையில் கூடுதல் வரதட்சிணை கேட்டு  சுடலையும், அவரது குடும்பத்தினரும் பேச்சியம்மாளை அவரது வீட்டுக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பேச்சியம்மாள் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ஆய்வாளர் வர்க்கீஸ் அம்மாள் விசாரணை நடத்தி, பேச்சியம்மாளின் கணவர் சுடலையை கைது செய்தார். மேலும், அவரது குடும்பத்தினர் 6 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai