சுடச்சுட

  

  விஜயராமபுரம் கோயிலில் ரூ.3 ஆயிரத்துக்கு ஏலம்போன உப்பு பெட்டி

  By சாத்தான்குளம்  |   Published on : 18th June 2015 12:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விஜயராமபுரம் அருள்தரும் தேவிஸ்ரீ முத்தாரம்மன் கோயிலில் ஒரு உப்பு பெட்டி ரூ.3 ஆயிரத்துக்கு ஏலம்போனது.

  சாத்தான்குளம் அருகேயுள்ள இக்கோயிலில்  ஆண்டுதோறும் கோயில் கொடை விழா ஆடி மாதம் கடைசி வாரத்தில் நடைபெறும். இக்கொடை விழா  நடத்துவதற்கு முன் வைகாசி மாத கடைசி திங்கள்கிழமையில் விழாவுக்கு நிதி சேர்க்கும் விழா நடத்தப்படும்.

  இதில் கிராம மக்கள் நேர்ச்சை பொருள்களை காணிக்கையாக வைப்பர். மேலும், ஒவ்வொரு வீட்டில் இருந்து ஓலைப் பெட்டியில் உப்பும் காணிக்கையாக வைக்கப்படும்.

  கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றவுடன் கிராம  மக்கள் முன்னிலையில் கிராம மக்களின் நேர்ச்சை பொருள்கள் ஏலம் விடப்படும். அதில் முதல் உப்பு பெட்டிக்கு மட்டும் கடும் போட்டி ஏற்படும். அதன்படி நிகழாண்டில் கோயில் கொடை விழாவுக்கு  நிதி சேர்க்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் காணிக்கையாக பல்வேறு நேர்ச்சை பொருள்களும், 80-க்கும் மேற்பட்ட உப்பு பெட்டிகளும் வைக்கப்பட்டன. பின்னர் கோயில் தர்மகர்த்தா வரதராஜன் முன்னிலையில் ஏலம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில், முதல் உப்பு பெட்டி ரூ. 3 ஆயிரத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது. இந்த ஏலத்தை கோயில் தர்மகர்த்தா வரதராஜனே எடுத்தார். மற்ற உப்பு பெட்டிகள் குறைந்த விலைக்கே ஏலம் போனது.

  இதையடுத்து மற்ற பொருள்களும் ஏலம் விடப்பட்டன. தொடர்ந்து கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான கிராம மக்கள் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai