சுடச்சுட

    

    கோவில்பட்டி அருகே திங்கள்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்த ஆயுர்வேத மருத்துவர் புதன்கிழமை இறந்தார்.

    தூத்துக்குடி அண்ணா நகர் 11ஆவது தெருவைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன் (32). இவர், திங்கள்கிழமை இரவு ஏழாயிரம்பண்ணையிலிருந்து பைக்கில் பசுவந்தனைக்குச் சென்று கொண்டிருந்தாராம். அப்போது சிவந்திப்பட்டி - துறையூர் இடையே எதிர்பாராதவிதமாக அங்கிருந்த பள்ளத்தில் விழுந்தாராம். இதில் பலத்த காயமடைந்த அவர், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவர் புதன்கிழமை காலை இறந்தார். இதுகுறித்து கொப்பம்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai