சுடச்சுட

    

    கோவில்பட்டியில் குடும்பத் தகராறு காரணமாக வேன் ஓட்டுநர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

    கோவில்பட்டி கதிரேசன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் கண்ணன் (41). வேன் ஓட்டுநரான இவருக்கு செல்வமுனீஸ்வரி (35) என்ற மனைவியும், கார்த்திக் (13), ஜெயராம்(10) என்ற இரு மகன்களும், சுகனா (5) என்ற மகளும் உள்ளனர். மது அருந்தும் பழக்கமுடைய கண்ணனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவில் தம்பதிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாம். இதையடுத்து  கண்ணன் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

    தகவலறிந்த மேற்கு காவல் நிலைய போலீஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai