சுடச்சுட

  

  தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) மூன்று கிராமங்களில் அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கோவில்பட்டி வட்டத்தில் கே. சிதம்பராபுரம் கிராமத்திலும், விளாத்திகுளம் வட்டத்தில் கூத்தலூரணி மற்றும் வெள்ளையம்மாள்புரம் கிராமத்திலும் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) வட்டாட்சியர்கள் தலைமையில் அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.

  இந்த முகாம்களில் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல்   மற்றும் வருவாய்த் துறையினரால்  நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட உள்ளது என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai