Enable Javscript for better performance
ஆறுமுகனேரி ஸ்ரீசோமசுந்தரி அம்மன் கோயில் ஆனித் திருவிழா: குடவருவாயில் தீபாராதனை- Dinamani

சுடச்சுட

    

    ஆறுமுகனேரி ஸ்ரீசோமசுந்தரி அம்மன் கோயில் ஆனித் திருவிழா: குடவருவாயில் தீபாராதனை

    By ஆறுமுகனேரி  |   Published on : 19th June 2015 12:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆறுமுகனேரி ஸ்ரீசோமசுந்தரி அம்மன் சமேத ஸ்ரீசோமநாத சுவாமி கோயில் ஆனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை இரவு குடவருவாயில் தீபாராதனை நடைபெற்றது.

    இக்கோயில் ஆனி உத்திரப் பெருந்திருவிழா கடந்த 14ஆம் தேதி தொடங்கி நாள்தோறும் காலை மற்றும் இரவு சுவாமி, அம்பாள் பூஞ்சப்பரத்தில் பவனி நடைபெற்று வருகிறது. 4ஆம் திருநாளான புதன்கிழமை காலை சுவாமி, அம்பாள் பூஞ்சப்பரத்தில் வீதியுலா நடைபெற்றது. காலை 10 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. மாலை 6 மணிக்கு சிறப்பு சாயரட்சை பூஜை, அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. இரவு 8.30-க்கு சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி குடவருவாயிலில் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர் வீதியுலா நடைபெற்றது. 7ஆம் திருநாளான சனிக்கிழமை இரவு ஸ்ரீநடராஜ பெருமான் சிகப்பு சாத்தி தரிசனம் மற்றும் பவனியும், ஞாயிற்றுக்கிழமை காலை வெள்ளை சாத்தி தரிசனம், இரவு பச்சை சாத்தி தரிசனம் மற்றும் வீதியுலா நடைபெறுகிறது. 10 ஆம் திருநாளான 26ஆம் தேதி இரவு சுவாமி, அம்பாள் சப்தவர்ண காட்சி, வீதியுலா நடைபெறுகிறது.

    ஏற்பாடுகளை திருவாவடுதுறை ஆதீனத்தாரும் மற்றும் பக்த ஜன சபையினரும் செய்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai