சுடச்சுட

    

    பேட்மாநகரம் பகுதியில் வீட்டு உபயோக சிலிண்டர்களை முறைகேடாக பயன்படுத்த உதவிடும் மின்மோட்டார் மற்றும் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது. 

    ஸ்ரீவைகுண்டம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் வீட்டு உபயோக சிலிண்டர்கள், நான்கு சக்கர வாகனங்களுக்கு மாற்றிக் கொடுப்பதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் வட்ட வழங்கல் அலுவலர் லிங்கராஜ், குடிமைப்பொருள் வழங்கல் தனி வருவாய் ஆய்வாளார் ராஜேந்திரன் ஆகியோர் பேட்மாநகரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது, அலிபேக் மகன் பைசல் (27) வீட்டில் வீட்டு உபயோக சிலிண்டர்களை நான்கு சக்கர வாகனங்களுக்கு மாற்றிக் கொடுப்பது தெரியவந்தது. இதையடுத்து, அதற்கு பயன்படும் மின்மோட்டார் இயந்திரத்தையும், 4 வீட்டு உபயோக சிலிண்டர்களையும் அவர்கள் பறிமுதல் செய்தனர். 

    வல்லநாடு மற்றும் தெய்வச்செயல்புரம் உள்ளிட்டப் பகுதிகளில் டீ கடை மற்றும் ஹோட்டல்களை ஆய்வு செய்ததில், வல்லநாடு பிரதான பஜாரில் உள்ள ஹோட்டலில் பயன்படுத்தப்பட்ட 2 வீட்டு உபயோக சிலிண்டர்களையும் வட்ட வழங்கல் அலுவலர் பறிமுதல் செய்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai