சுடச்சுட

  

  ஓட்டுநர் பயிற்சி: 100 இளைஞர்களுக்கு உரிமம் அளிப்பு

  By கோவில்பட்டி  |   Published on : 19th June 2015 12:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோவில்பட்டியில் ஓட்டுநர் பயிற்சி பெற்ற 100 இளைஞர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கும் விழா நடைபெற்றது.

  தமிழக அரசின் புதுவாழ்வுத் திட்டம் மற்றும் கோவில்பட்டி பாண்டியன் ஓட்டுநர் பயிற்சி பள்ளி சார்பில் இளையோர் தொழில் திறன் பயிற்சி மூலம் இளைஞர்களுக்கு ஓட்டுநர் பயிற்சியளிக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் ஏழை, எளிய குடும்பங்களில் உள்ள இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் ஜே.சி.பி., கணினி, அழகுக் கலை, இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

  கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பாண்டியன் ஓட்டுநர் பயிற்சி பள்ளி மூலம் இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியின் நிறைவு நாளன்று நடைபெற்ற ஓட்டுநர் உரிமம் வழங்கும் விழாவுக்கு, புதுவாழ்வு திட்ட மாநில நுன்நிதி வல்லுநர் அருள்மொழி செல்வன் தலைமை வகித்தார்.  பயிற்சி பள்ளி நிர்வாகி கணபதி, உதவி திட்ட மேலாளர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்டாட்சியர் கண்ணபிரான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ஓட்டுநர் பயிற்சி பெற்ற 100 இளைஞர்களுக்கு ஓட்டுநர் உரிமங்களை வழங்கிப் பேசினார். நிகழ்ச்சியில் கோவில்பட்டி பயிலும் குழு ஒருங்கிணைப்பாளர் முத்துமுருகன், புதுவாழ்வு திட்ட அணித் தலைவர்கள் செந்தில்வேல், ஆறுமுகம், ராஜ்குமார், சங்கரபாண்டியன், கருணாகரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஓட்டுநர் பயிற்சி பள்ளியைச் சேர்ந்த கணேஷ் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai