Enable Javscript for better performance
கக்கன் சிலைக்கு மாலை அணிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    மறைந்த முன்னாள் அமைச்சர் கக்கன் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு காங்கிரஸார் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸார் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் கக்கன் பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, போல்டன்புரத்தில் உள்ள அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சியின் மாநகர் மாவட்டத் தலைவர் ஏடிஎஸ் அருள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்டத் தலைவர் சுப்பிரமணிய ஆதித்தன், மண்டலத் தலைவர் செந்தூர்பாண்டி மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    தமிழ் மாநில காங்கிரஸ்:  தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மாவட்டத் தலைவர் எஸ்டிஆர் விஜயசீலன் தலைமையில் கக்கன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  நிகழ்ச்சியில், மாநில இணைச் செயலர் முரளிதரன், நிர்வாகிகள் பாக்கியராஜ், பாரகன் அந்தோணிமுத்து, ரவிகுமார், அருண் நேருராஜ், அம்பிகாபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai