சுடச்சுட

    

    கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முடக்குவாதம் நோய்க்கு நவீன அறுவை சிகிச்சை

    By கோவில்பட்டி  |   Published on : 19th June 2015 12:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் முடக்குவாதம் நோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு நவீன அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    கோவில்பட்டியை அடுத்த மேலஈராலைச் சேர்ந்தவர் ஜானகியம்மாள் (55). கடந்த 30  ஆண்டுகளாக முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டு, நடக்க முடியாமல் தவழ்ந்து வாழ்ந்து கொண்டிருந்தார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்தார். அவரை பரிசோதித்த முடநீக்கியல் மருத்துவர்கள் மோசஸ்பால், பாலாஜி ஆகியோர், அவருக்கு இரண்டு நிலை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என முடிவு செய்தனர். அதன்படி, அவருக்கு அனைத்து பரிசோதனைகளும் செய்த பின்னர், தமிழக முதல்வரின்  விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) பானு உத்தரவின்பேரில், மருத்துவமனை கண்காணிப்பாளர் பூவேஸ்வரி ஆலோசனைப்படி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவர்கள் மோசஸ்பால், பாலாஜி, மயக்க மருந்து நிபுணர் பாலகிருஷ்ணன் ஆகியோர் இந்த அறுவை சிகிச்சையை இரண்டு கட்டங்களாகச் செய்து முடித்தனர்.சிகிச்சைக்கு பின்னர், ஜானகியம்மாள் இயன்முறை நிபுணர் எழில்வாணன் வழிகாட்டுதலில், தற்போது நன்றாக நடக்கிறார். இந்த சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai