சுடச்சுட

  

  கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் பகுதிகளில் ஜூன் 20 மின்தடை

  By தூத்துக்குடி  |   Published on : 19th June 2015 12:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஓட்டப்பிடாரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 20) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

  இதுகுறித்து தூத்துக்குடி நகர்ப்புற மின்வாரிய செயற்பொறியாளர் இரா. புருஷோத்தமன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  ஓட்டப்பிடாரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை நடைபெறுவதையொட்டி, ஓட்டப்பிடாரம், ஒசநூத்து, ஆரைக்குளம், பாஞ்சாலங்குறிச்சி, வெள்ளாரம், க. சுப்பிரமணியபுரம், குறுக்குச்சாலை, புதியம்புத்தூர், சில்லாநத்தம், வீரபாண்டியபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை மின் விநியோகம் இருக்காது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  கோவில்பட்டி:   மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக, கழுகுமலை, கோவில்பட்டி, விஜயாபுரி, சிட்கோ ஆகிய துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரையும், எப்போதும்வென்றான், எம்.துரைச்சாமிபுரம் ஆகிய துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் பிற்பகல் 1 மணிமுதல் மாலை 5 மணிவரையும் மின் விநியோகம் இருக்காது என கோவில்பட்டி கோட்ட செயற்பொறியாளர் அழகரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai