Enable Javscript for better performance
சிங்கப்பூரில் கோவில்பட்டி கல்லூரி முன்னாள் மாணவர் சங்கக் கிளை தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    சிங்கப்பூரில் கோவில்பட்டி கல்லூரி முன்னாள் மாணவர் சங்கக் கிளை தொடக்கம்

    By கோவில்பட்டி  |   Published on : 19th June 2015 12:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்க கிளை சிங்கப்பூரில் தொடங்கப்பட்டது.

    இக்கல்லூரியில் பயின்று சிங்கப்பூரில் பணிபுரியும் முன்னாள் மாணவர்களுக்காக இச்சங்கம் தொடங்கப்பட்டது. விழாவுக்கு, முன்னாள் மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தலைமை வகித்து சங்கத்தை தொடங்கிவைத்தார். இதில், பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும், சுயதொழில் புரியும் இக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சுமார் 60 பேர் கலந்துகொண்டனர்.

    கருத்தரங்கு: சிங்கப்பூர் சிம் பல்கலைக்கழகமும், உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றமும் இணைந்து 14ஆவது தமிழ் இணைய மாநாடு 2015 என்ற தலைப்பில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு 3 நாள்கள் நடைபெற்றன.

    கருத்தரங்கில் நேஷனல் பொறியியல் கல்லூரி பேராசிரியர் கே.ஜி.சீனிவாசகன் கலந்துகொண்டு, ஆங்கிலத்திலிருந்து தமிழ் இயந்திர மொழியாக்கத்தில் விதிகளை பயன்படுத்தி முன்னிடை சொற்றொடர்களை கையாளுதல் என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பித்து விவாதங்களில் பங்கேற்றார்.

    இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ் தொழில்நுட்ப வல்லுநர்கள், தமிழ் கணினி ஆய்வாளர்கள் சுமார் 150 பேர் கலந்துகொண்டு, 75 ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.

    சிங்கப்பூர் சென்று தமிழ் இணைய மாநாடு மற்றும் முன்னாள் மாணவர் சங்க கூட்டத் தொடக்க விழாவில் கலந்துகொண்டு திரும்பிய பேராசிரியரை, கே.ஆர். கல்வி நிறுவனங்களின் தலைவர் கே.ராமசாமி, நிர்வாக இயக்குநர் கே.ஆர்.அருணாசலம், பொறியியல் கல்லூரி இயக்குநர் சொக்கலிங்கம், கல்லூரி முதல்வர் சண்முகவேல் உள்ளிட்டோர் பாராட்டினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai