சுடச்சுட

  

  திருச்செந்தூரில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்

  By திருச்செந்தூர்  |   Published on : 19th June 2015 12:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தூத்துக்குடி மாவட்ட போக்குவரத்து அலுவலகத்துக்குள்பட்ட திருச்செந்தூர் பகுதி அலுவலகத்தை தரம் உயர்த்தி, வட்டாரப் போக்குவரத்து அலுவலகமாக முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் அலுவலகப் பயன்பாட்டை வியாழக்கிழமை தொடங்கிவைத்தார்.

  இதையடுத்து திருச்செந்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வந்த மாவட்ட ஆட்சியர் ம.ரவிகுமார், புதிய வாகன வரிசை எண் (டி.என். 92) கொண்ட ஓட்டுநர் உரிமத்தையும், பழகுநர் உரிமத்தையும் வழங்கினார். மதுரை சரக போக்குவரத்து இணை ஆணையர் வி.பாலன் இனிப்பு வழங்கினார்.

  நிகழ்ச்சியில், திருச்செந்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (பொ) கே.ஆனந்த், கோட்டாட்சியர் தெ.தியாகராஜன், வட்டாட்சியர் சொ.வெங்கடாசலம், மோட்டார் வாகன ஆய்வாளர் எம்.கனகவல்லி, நெல்லை மண்டல போக்குவரத்து பறக்கும்படை அலுவலர் சந்திரசேகரன், திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் லி.ஹேமலதா லிங்ககுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் பாக்கியவதி, திருச்செந்தூர் பேரூராட்சித் தலைவர் (பொ) தொ.ராஜநளா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  ஏற்கெனவே இருக்கும் திருச்செந்தூர், சாத்தான்குளம் வட்டங்களுடன், ஸ்ரீவைகுண்டம் வட்டமும் உள்ளடங்கியதாக இந்த அலுவலகம் செயல்படும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai