Enable Javscript for better performance
தூத்துக்குடியில் 3 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கிட்டங்கி- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடியில் 3 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கிட்டங்கி

    By தூத்துக்குடி  |   Published on : 19th June 2015 12:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடியில் 3 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 கிட்டங்கிகளை முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தார்.

    தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகத்தில், புதிதாக தலா 1500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 கிட்டங்கிகள் ரூ. 2.40 கோடியில் கட்டப்பட்டது. இந்த கிட்டங்கிகளை முதல்வர் ஜெயலலிதா சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி வியாழக்கிழமை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார், நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் முருகேசன், உதவி செயற்பொறியாளர் முத்துவேல், மக்கள் தொடர்பு அலுவலர் தமிழ் செல்வராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    இதுகுறித்து ஆட்சியர் கூறுகையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பாக கட்டப்பட்ட கிட்டங்கி மூலம், பொது மக்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருள்களை சேமித்து வைத்து உரிய நேரத்தில் வழங்க முடியும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai