சுடச்சுட

  

  நாளை சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

  By தூத்துக்குடி  |   Published on : 19th June 2015 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் சனிக்கிழமை (ஜூன் 20) நடைபெறுகிறது.

  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகர்வோர்கள் குறைதீர்க்கும் கூட்டம் சனிக்கிழமை (ஜூன் 20) முற்பகல் 11 மணிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

  இக்கூட்டத்தில், எரிவாயு உருளை நுகர்வோர் கலந்துகொண்டு தங்கள் குறைகளை வெள்ளைத் தாளில் தட்டச்சு செய்தோ அல்லது தெளிவாக எழுதியோ நேரில் அளிக்கலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai