சுடச்சுட

  

  "புதிய தொழில்முனைவோருக்கு மானியத்துடன் கடன் வசதி'

  By தூத்துக்குடி  |   Published on : 19th June 2015 12:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரசு 25 சதவீத மானியத்துடன் வழங்கும் கடனுதவியை புதிய தொழில்முனைவோர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.

  இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  முதல் தலைமுறையைச் சார்ந்த பட்டப்படிப்பு, பட்டயபடிப்பு, (டிப்ளமோ) அல்லது ஐடிஐ முடித்த இளைஞர்கள் புதியதாக தொழில் தொடங்குவதற்காக தமிழக அரசு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம்  என்ற ஒரு திட்டத்தை மாவட்ட தொழில் மையம் மூலமாக செயல்படுத்தி வருகிறது.  25 சதவீத  மானியத்துடன் கூடிய இந்தத் திட்டத்தின் மூலம் திட்ட மதிப்பீடு 5 லட்சம் ரூபாய்க்கு மேல் ஒரு கோடிக்கு மிகாமல் புதியதாக உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில் நிறுவனங்கள் தொடங்கலாம்.

  பொதுப்பிரிவினர் திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதமும், மகளிர், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் ஆகிய சிறப்புப் பிரிவினர் திட்ட மதிப்பீட்டில் 5 சதவீதமும் விண்ணப்பதாரரின் சொந்த முதலீடாக செலுத்த வேண்டும்.

  திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.25 லட்சம் மானியமாக வழங்கப்படும். மேலும் இந்தத் திட்டத்தின் கீழ் வங்கிக் கடனுதவி பெற்றவர்கள் முறையாக கடனைத் திருப்பி செலுத்தும் பட்சத்தில் 3 சதவீத பின்முனை வட்டி மானியமும் வழங்கப்படும்.

  இந்தத் திட்டத்தில் மகளிருக்கு 50 சதவீத ஒதுக்கீடு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் வருமான வரம்பின்றி அனைவரும் பயன்பெறலாம். தூத்துக்குடி மாவட்டத்துக்கு நிகழ் நிதியாயாண்டில் (2015-16) இந்தத் திட்டத்துக்கு ரூ.2.60 கோடி மானியமாக வழங்கிட குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆர்வமுள்ள தகுதி பெற்ற தொழில் முனைவோர், மாவட்ட தொழில் மையம், பைபாஸ் ரோடு அருகே, கோரம்பள்ளம், தூத்துக்குடி என்ற முகவரியில் விண்ணப்பங்களை பெற்று உடன் விண்ணப்பிக்கலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai