சுடச்சுட

  

  மனைவியைக் கொன்ற வழக்கு: துணை வட்டாட்சியர் கைது

  By தூத்துக்குடி  |   Published on : 19th June 2015 12:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மனைவியைக் கொன்ற வழக்கில் 5 மாதங்களுக்குப் பிறகு ஓட்டப்பிடாரம் துணை வட்டாட்சியர் உள்ளிட்ட மூன்று பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

  ஓட்டப்பிடாரம் துணை வட்டாட்சியராகப் பணியாற்றி வருபவர் ராமச்சந்திரன் (47). இவரது மனைவி விஜயலட்சுமி (43). தூத்துக்குடி அரசு அலுவலர் குடியிருப்பில் வசித்து வந்த விஜயலட்சுமி, கடந்த ஜனவரி 8 ஆம் தேதி கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

  இதுதொடர்பாக சிப்காட் போலீஸார் வழக்குப் பதிந்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இந்நிலையில் மனைவியை கொலை செய்ததாக துணை வட்டாட்சியர் ராமச்சந்திரன் மற்றும் அவரது நண்பர்களான முருகேசன், கனகராஜ் ஆகியோரை போலீஸார் வியாழக்கிழமை இரவு கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai