சுடச்சுட

  

  மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தை சுத்தம் செய்த போலீஸார்

  By தூத்துக்குடி  |   Published on : 19th June 2015 12:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் போலீஸார் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

  மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் முள்புதர்கள் அதிகம் காணப்பட்டது. இதையடுத்து, போலீஸார் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள், தனியார் ஏற்றுமதி நிறுவன ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

  இப்பணியில் தனிப்பிரிவு போலீஸார், நிலமோசடி தடுப்புப் பிரிவு போலீஸார், குற்ற ஆவணக் காப்பக பிரிவு போலீஸார், சமூக நீதி மற்றும் பாதுகாப்புப் பிரிவு போலீஸார், ஆயுதப்படை போலீஸார் உள்ளிட்டோரும் ஈடுபட்டனர்.

  அலுவலக வளாகத்திலிருந்த முள்புதர்கள் அனைத்தும் ராட்சத இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டன.  அலுவலக வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட போலீஸார், அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் தனியார் ஏற்றுமதி நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் பாராட்டு தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai