Enable Javscript for better performance
மாவட்ட கிரிக்கெட் போட்டி: வெள்ளாளன்விளை அணிக்கு முதல் பரிசு- Dinamani

சுடச்சுட

    

    மாவட்ட கிரிக்கெட் போட்டி: வெள்ளாளன்விளை அணிக்கு முதல் பரிசு

    By சாத்தான்குளம்  |   Published on : 19th June 2015 12:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாத்தான்குளத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் வெள்ளாளன்விளை அணிக்கு முதல் பரிசு கிடைத்தது.

    சாத்தான்குளம் லெவன் கூலர்ஸ் அணி சார்பில்  முதலாம் ஆண்டு மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி கரையடிகுளத்தில் 4 நாள்கள் நடைபெற்றது. இதில், மாவட்ட அளவில் 32 அணிகள் கலந்துகொண்டன. முதல் நாள் போட்டியை பேரூராட்சி உறுப்பினர் ஜோசப் அலெக்ஸ் தொடங்கிவைத்தார். இதில், வெள்ளாளன்விளை அணி முதல் பரிசும், கொட்டக்காடு அணி 2 ஆம் பரிசும், சிவலூர் அணி 3ஆம் பரிசும், ஞானியார்குடியிருப்பு அணி 4ஆம் பரிசு பெற்றது.

    பின்னர் முதலிடம் பெற்ற வெள்ளாளன்விளை அணிக்கு கொம்பன்குளம் தொழிலதிபர் பேச்சிமுத்து, 2ஆம் இடம் பெற்ற கொட்டங்காடு அணிக்கு சாத்தான்குளம் ஒன்றியக் குழுத் தலைவர் ஒய்.எஸ். சுரேஷ்குமார், 3ஆம் இடம் பெற்ற சிவலூர் அணிக்கு சாத்தான்குளம் பேரூராட்சித் தலைவர் ஆ.செ. ஜோசப், 4ஆம் இடம் பெற்ற ஞானியார்குடியிருப்பு அணிக்கு தொழிலதிபர் ஏ. ஆபேல்விஜய் ஆகியோர் பரிசு வழங்கினர்.

    சிறந்த ஆட்டக்காரருக்கான பரிசை கொட்டங்காடு அணித் தலைவர் வேல்மணிக்கு, டிஎன்டிடிஏ புலமாடன் செட்டியார் மேல்நிலைப் பள்ளி நூலக எழுத்தர் எஸ். ஸ்டீபன் பீற்றர் வழங்கினார்.  இதில், பேரூராட்சி கவுன்சிலர் ஜோசப் அலெக்ஸ், ஆசிரியர் கிறிஸ்டோபர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை லெவன் கூலர்ஸ்  அணியைச் சேர்ந்த விஜய், ஜோன்ஸ், துரைப்பாண்டி, மணிகண்டன், வசந்த் ஆகியோர் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai