சுடச்சுட

  

  கோவில்பட்டியில் வாஞ்சிநாதன் நினைவு நாள் பொதுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

  கோவில்பட்டி அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகம் மற்றும் இந்திய கலாசார நட்புறவுக் கழகம் ஆகியன சார்பில், கிருஷ்ணன் கோயில் தெருவில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, நட்புறவு கழகச் செயலர் நம்.சீனிவாசன் தலைமை வகித்தார்.

  இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகச் செயலர் ஆம்ஸ்ட்ராங் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தைச் சேர்ந்த இளசைமணியன் வாஞ்சிநாதன் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, புனித ஓம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் லட்சுமணப்பெருமாள், இலக்கிய உலா நிறுவனர் ரவீந்தர், திருவள்ளுவர் மன்றத் தலைவர் கருத்தப்பாண்டி, கலாசார நட்புறவுக் கழக மாவட்ட பொதுச் செயலர் தமிழரசன், அனைத்திந்திய முற்போக்கு பேரவை மாநிலச் செயலர் சத்தியபாலன் ஆகியோர் பேசினர்.

  கூட்டத்தில், அரசு கிளை நூலகர் பூல்பாண்டி, தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழுவைச் சேர்ந்த மேரிஷீலா, வீட்டு வேலை பார்க்கும் பெண்கள் சங்க மாவட்டத் தலைவர் ஜானகி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக கலைச்சுடர் அமலியின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai