சுடச்சுட

  

  அங்கன்வாடி மைய அமைப்பாளரை கத்தியால் குத்தி நகை பறிக்க முயற்சி

  By சாத்தான்குளம்  |   Published on : 20th June 2015 12:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சாத்தான்குளம் அருகே அங்கன்வாடி மையத்துக்குள் புகுந்து அமைப்பாளரை கத்தியால் குத்தி நகையைப் பறிக்க முயன்ற இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.

  சுண்டங்கோட்டையைச் சேர்ந்த பெனிஸ்டன் மனைவி ஜெயஎஸ்தர் (32). இவர் அதே ஊரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் அமைப்பாளராக உள்ளார். இவருக்கு உதவியாளராக கர்மாவிளையைச் சேர்ந்த சுரேஷ் மனைவி செல்வி (40) பணியாற்றுகிறார். இருவரும் அங்கன்வாடியில் வெள்ளிக்கிழமை பணியிலிருந்தபோது, 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் அங்கு வந்தாராம். ஜெயஎஸ்தரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை கழற்றித் தருமாறு கேட்டாராம். அதற்கு அவர் மறுத்ததால், உடனே அந்த நபர் கத்தியால் சங்கிலியை அறுக்க முயன்றாராம். அப்போது அவர் கூச்சலிடவே ஜெயஎஸ்தர் கழுத்தில் கத்தியால் குத்தியதுடன், தடுக்க வந்த உதவியாளர் செல்வியையும் கீழே தள்ளி விட்டு அந்த நபர் தப்பிவிட்டாராம்.

  இதில் பலத்த காயமடைந்த ஜெயஎஸ்தர் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இது குறித்த புகாரின்பேரில், தட்டார்மடம் போலீஸார் நடத்திய விசாரணையில், ஜெயஎஸ்தரிடம் நகையைப் பறிக்க முயன்றது கொம்மடிக்கோட்டையைச் சேர்ந்த முருகன் என தெரியவந்தது. இதையடுத்து சிறப்பு  உதவி ஆய்வாளர் ஆறுமுகபெருமாள் வழக்குப் பதிந்து முருகனை தேடி வருகிறார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai