சுடச்சுட

  

  அடைக்கலாபுரத்தில் தீ விபத்து: 5 குடிசைகள் சேதம்

  By திருச்செந்தூர்  |   Published on : 20th June 2015 12:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரத்தில் மின் கசிவு ஏற்பட்டு 5 குடிசைகள் எரிந்து சேதமடைந்தன.

  அடைக்கலாபுரம் தெற்குத்தெருவைச் சேர்ந்தவர் பால்ராஜ். வெள்ளிக்கிழமை அதிகாலை இவரது வீட்டில் ஏற்பட்ட மின் கசிவினால் வீட்டில் தீப்பற்றியதாம். தொடர்ந்து அருகேயுள்ள அந்தோனிகுருஸ், ஜெயபாலி, ஆரோக்கியராஜ், மிக்கேல்ராஜ் ஆகியோரின் வீடுகளுக்கும் தீ பரவியதாம். இதில் 5 குடிசைகள் எரிந்தன. இதுகுறித்து தகவலறிந்த திருச்செந்தூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை நிலைய அலுவலர் சந்திரசேகரன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்.

   இந்த தீ விபத்தில் 2 ஆடுகள், 11 கோழிகள், டி.வி.க்கள், பீரோக்கள், மிக்ஸி கிரைண்டர்கள் உள்பட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்களும், ரொக்கம் ரூ.41 ஆயிரத்து 300}ம் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோட்டாட்சியர் தெ.தியாகராஜன் நேரில் சென்று ஆறுதல் கூறி, தமிழக அரசின் நிவாரணத்தொகையாக தலா ரூ. 5 ஆயிரம் வழங்கினார். அவருடன் வட்டாட்சியர் சொ.வெங்கடாசலம், வருவாய் ஆய்வாளர் அ.பாலசுந்தரம், கிராம நிர்வாக அலுவலர் ரஞ்சித் ஆகியோர் சென்றனர்.  ஆறுமுகனேரி பேரூராட்சித் தலைவர் கல்யாணசுந்தரம், தீ விபத்தில் பாதிக்கப்பட்ட ஐந்து பேருக்கும் தலா ரூ. 2 ஆயிரம் வழங்கினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai