Enable Javscript for better performance
உறவினரிடையே தகராறு: 5 பேர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    சாத்தான்குளம் அருகே சொத்து தகராறில் அண்ணனை தாக்கிய தம்பி, இவரது மனைவி உள்பட 5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

    தெற்கு பேய்க்குளத்தைச் சேர்ந்தவர் விவசாயி நா. பழனி (47). இவரது தம்பி பெருமாளுக்கும், இவருக்கும் முன்விரோதம் உள்ளதாம்.

    இந்நிலையில் வியாழக்கிழமை இருவருக்குள் தகராறு ஏற்பட்டதாம். அப்போது, பெருமாள், அவரது மனைவி சொர்ணம், மகன்கள் ஐயப்பன், நாராயணதாஸ், சுரேஷ் ஆகிய 5 பேரும் சேர்ந்து பழனியை தாக்கினராம்.

    இதில் காயமடைந்த அவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சாத்தான்குளம்  உதவி ஆய்வாளர்  ரசலையன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai