Enable Javscript for better performance
\\\"கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்\\\'- Dinamani

சுடச்சுட

    

    "கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்'

    By தூத்துக்குடி  |   Published on : 20th June 2015 12:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வீர, தீர செயல் புரிந்தவர்கள் கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

     இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் க. சேவியர் ஜோதி சற்குணம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய அரசின் சார்பில் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் மிகப்பெரிய சாதனை புரியும் பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டு வருகிறது. 2015 ஆம் ஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    சமுதாயத்தில் மிகப்பெரிய துணிச்சலான தைரியமிக்க சாதனை புரிந்த  பெண்கள் இந்த விருதினை பெற விண்ணப்பிக்கலாம். மேலும் அனைத்து துறையில் உள்ள பெண்களும் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.  விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் உரிய சாதனை சான்றுகளுடன் விண்ணப்பங்களை ஜூன் 25 ஆம் தேதி  மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலர்,  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்,  மாவட்ட விளையாட்டரங்கம், ஜார்ஜ் ரோடு, தூத்துக்குடி - 628 001 என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு 0461-2321149 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai