சுடச்சுட

  

  காயல்பட்டினத்தில் பெண் தற்கொலை: கணவர், மாமியார் உள்பட மூவர் கைது

  By ஆறுமுகனேரி  |   Published on : 20th June 2015 12:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காயல்பட்டினத்தில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் அவரது கணவர் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

  உடன்குடி காலன்குடியிருப்பைச் சேர்ந்த உசேன் மகள் நபீலா பெநாசீர்(23). இவருக்கும் காயல்பட்டினம் பெரிய நெசவு தெரு முகம்மது ரபீக் மகன் யூசுப் அலாவுதீனுக்கும் (27) கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3இல் திருமணம் நடைபெற்றது. யூசுப் அலாவுதீன் சென்னையில் உள்ள ஒரு நகைக் கடையில் வேலை செய்கிறார்.இந்நிலையில் கடந்த 10 நாள்களுக்கு முன்பு, குடும்பத் தகராறு காரணமாக நபீலா பெநாசீர் தனது தாய் வீட்டுக்கு சென்றாராம். அவரை தாய் ஜமீனத் சமாதானப்படுத்தி மீண்டும் காயல்பட்டினத்தில் விட்டுவிட்டு சென்னைக்கு சென்றிருந்தாராம். இதனிடையே, கடந்த புதன்கிழமை பிற்பகல் நபீலா பெநாசீர், கணவரின் வீட்டில் கருகிய நிலையில் இறந்து கிடந்தார். அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.

  இதுகுறித்து ஆறுமுகனேரி உதவி ஆய்வாளர் மாடசாமி வழக்குப்பதிவு செய்தார். திருச்செந்தூர் கோட்டாட்சியர் தியாகராஜன் விசாரணை நடத்தியதில், பெநாசீர் தற்கொலைக்கு வரதட்சிணை கொடுமைதான் காரணம் என தெரியவந்ததாம். இதையடுத்து, தற்கொலைக்கு தூண்டியதாக பெநாசீரின் கணவர் யூசுப் அலாவுதீன், அவரது தாயார் தரசாபீவி (53), இவரது அக்கா பாத்திமா முஜமில்லா (30) ஆகிய 3 பேரையும் ஆறுமுகனேரி போலீசார் கைது செய்து திருச்செந்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்றக் காவல் சிறையில் அடைத்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai