Enable Javscript for better performance
கோவில்பட்டியில் தலைக்கவச விழிப்புணர்வுப் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டியில் தலைக்கவச விழிப்புணர்வுப் பேரணி

    By கோவில்பட்டி  |   Published on : 20th June 2015 12:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இருசக்கர வாகனம் ஓட்டுவோர் தலைக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தி கோவில்பட்டியில் வெள்ளிக்கிழமை விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

    தமிழகத்தில் இருசக்கர வாகனம் ஓட்டுவோர் ஜூலை 1ஆம் தேதி முதல் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி, தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி கோவில்பட்டியில் காவல் துறை சார்பில் வெள்ளிக்கிழமை விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. கோவில்பட்டி-எட்டயபுரம் சாலையிலிருந்து பேரணியை ஏ.எஸ்.பி. முரளிரம்பா கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

    இப்பேரணி நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்றது. அப்போது தலைக்கவசம் அணிவதன் அவசியம்குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதில், காவல் துறை ஆய்வாளர்கள் பவுல்ராஜ் (கிழக்கு), சந்திரசேகர் (மேற்கு), உதயசூரியன் (கயத்தாறு), பொன்னரசு (நாலாட்டின்புத்தூர்), ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை நிறுவனர் தேன்ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai